ADDED : ஆக 24, 2024 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெட்டியார்சத்திரம்: ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் அறக்கட்டளை சார்பில் கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
அறக்கட்டளை அறங்காவலர் சேதுபாலகிருஷ்ணன் இதற்கான காசோலையை கேரளா நிதியமைச்சர் கே.என்.பாலகோபாலிடம் வழங்கினார். கேரள மாநிலம் ஆலத்துார் எம்.பி., ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் உடன் இருந்தனர்.

