/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஹிந்தி எதிரானது அல்ல திணிக்காதீர்கள் என்கிறோம்: முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
/
ஹிந்தி எதிரானது அல்ல திணிக்காதீர்கள் என்கிறோம்: முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
ஹிந்தி எதிரானது அல்ல திணிக்காதீர்கள் என்கிறோம்: முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
ஹிந்தி எதிரானது அல்ல திணிக்காதீர்கள் என்கிறோம்: முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
ADDED : பிப் 27, 2025 01:35 AM
திண்டுக்கல்; ''ஹிந்தி படிப்பவர்களுக்கு அ.தி.மு.க., எதிரானது அல்ல. திணிக்காதீர்கள் எனதான் கூறுகிறோம்'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
திண்டுக்கல்லில் நடந்த அ.தி.மு.க., பொதுகூட்டத்தில் அவர் பேசியதாவது : அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தி.மு.க., அரசிற்கு எதிராக உள்ளனர். பொய் சொல்லி எங்களிடம் ஓட்டுக்களை பெற்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின் என பேசத்தொடங்கி விட்டனர். திருநெல்வேலி சென்று அல்வா சாப்பிட்ட ஸ்டாலின் அப்படியே அரசு ஊழியர்களுக்கு கொடுக்க பார்க்கிறார். தி.மு.க., வை தோற்கடிப்போம் என கூறி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் இறங்கி உள்ளனர்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலினை காப்பாற்றிய பெருமை அரசு ஊழியர்களுக்கு உண்டு. ஆனால் அதை முதல்வர் மறந்து விட்டார். 2021 சட்டசபை தேர்தலில் வெறும் 100 முதல் 1500 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தான் அ.தி.மு.க., தோற்றுள்ளது. கிட்டத்தட்ட 42 எம்.எல்.ஏ.,க்கள் கிடைக்க வேண்டியது சிறிய ஓட்டு சிதறல்களால் கிடைக்கவில்லை. எதிர்வரும் தேர்தலில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.
போலீஸ் துறை இருக்கிறதா என்பது தெரியவில்லை. கொலை, கொள்ளை தொடங்கி கஞ்சா, லாட்டரி சீட்டு வரை விற்பனை தாராளமாக நடக்கிறது. பங்கை கொடுங்கள் என்ன வேண்டுமானலும் செய்து கொள்ளுங்கள் என தி.மு.க., இருக்கிறது.
அம்மா மினி கிளினிக்களுக்கு மூடுவிழா கண்டு மக்கள் மருந்தகம் திறந்துள்ளனர். ஹிந்தி பேசுபவர்களுக்கோ, கற்றுக் கொள்பவர்களுக்கோ அ.தி.மு.க., எதிரியல்ல. விருப்பம் இருப்பவர்கள் படிக்கட்டும். ஆனால் திணிக்காதீர்கள் என்று தான் கூறுகிறோம். முதலில் ஆதரித்துவிட்டு தற்போது பின்வாங்குகிறீர்களே என்ன நியாயம். நீங்கள் ஒப்புக்கொண்டதைத்தான் மத்திய அமைச்சர் காட்டுகிறார். முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தும் 28 பள்ளிகளிலும் மும்மொழிக்கொள்கை அமலில் உள்ளது. ஹிந்தி ஒழிக எனக்கூறும் முதல்வர் ஸ்டாலின் அவரின் தந்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவிற்கு மத்திய அமைச்சரை அழைத்தீர்கள். அந்த நாணயத்தில் ஹிந்தி இல்லையா. பேரன் தயாநிதிக்கு நன்றாக ஹிந்தி தெரியும் அதனால் எம்.பி., ஆக்கினோம் எனக் கூறியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்றார்.

