ADDED : ஏப் 14, 2024 06:46 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம். மெட்ரிக் பள்ளி மாணவர் ஜித்தின் அர்ஜூனன் பிகார் மாநிலம் பாட்னாவில் நடந்த தேசிய தடகள போட்டி நீளம் தாண்டுதலில் முதல் இடம், 100மீ. ஓட்டத்தில் 2ம் இடம், 110மீ. தடை ஓட்டத்தில் 3ம் இடம் பிடித்து சாதனை புரிந்தார்.
போட்டி முடிந்து திண்டுக்கல் வந்த இவரை வரவேற்க ரயில்வே ஸ்டேஷனில் தேசிய ஹாக்கி வீரர் ஞானகுரு தலைமையில் நுாற்றுக்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் குவிந்தனர்.
மாணவரை தடகள சங்க தலைவர் துரை ரத்தினம், செயலாளர் சிவக்குமார், உதவி செயலாளர் துரைராஜ், பள்ளி தலைவர் பரமசிவம், முதல்வர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஹாக்கி சங்க துணை த்தலைவர் ரமேஷ் பட்டேல், கால்பந்து சங்க செயலாளர் சண்முகம், மாவட்ட கேரம் சங்க தலைவர் சாமிநாதன், பயிற்சியாளர்கள் சந்திரசேகரன், பாண்டியராஜன், சரவணபாண்டிபாராட்டினர்.

