/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இதற்கு தீர்வுதான் என்ன; மது பாட்டில்களால் பாழாகும் மண் வளம்; கண்ணாடி சிதறலால் கதறும் கால்நடைகள்
/
இதற்கு தீர்வுதான் என்ன; மது பாட்டில்களால் பாழாகும் மண் வளம்; கண்ணாடி சிதறலால் கதறும் கால்நடைகள்
இதற்கு தீர்வுதான் என்ன; மது பாட்டில்களால் பாழாகும் மண் வளம்; கண்ணாடி சிதறலால் கதறும் கால்நடைகள்
இதற்கு தீர்வுதான் என்ன; மது பாட்டில்களால் பாழாகும் மண் வளம்; கண்ணாடி சிதறலால் கதறும் கால்நடைகள்
ADDED : மே 08, 2024 05:34 AM

தமிழகத்தில் அரசு சார்பில் மதுவிற்பனை துவங்கிய பின்னர் மதுபழக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. முன்பு எல்லாம் குடிப்பது தவறான பழக்கம் என பலரும் ரகசியமாக மதுக்கடை பக்கம் சென்று வருவர். அரசே விற்பதாக குடி பழக்கம் பெரிய தவறில்லை என்பது போல் மாறி உள்ளது. மது அருந்துவதற்கு என டாஸ்மாக் கடைகளையொட்டி குடிசை தொழில் நடக்கும் இடம் போன்று 'பார்' அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பொருட்களின் விலை அதிகம் இருப்பதாலும் தரம் குறைவு, உணவு ஒவ்வாமை பிரச்னை ஏற்படுதல் போன்ற பிரச்னைகளால் பெரும்பகுதி குடிமகன் 'பார்'களுக்கு செல்வதை விரும்புவதில்லை. கொரோனா தொற்று பிரச்னையால் பல மாதங்கள் 'பார்' இல்லாமல் மதுவிற்பனை நடந்ததால் வெளியிடங்களில் மது அருந்தும் பழக்கம் மேலும் அதிகரித்தது. தின்பண்டங்களை வெளி கடைகளில் வாங்கி கொண்டு காடு,மேடு, புதர், மலைச்சரிவுகள் என செல்வோரே அதிகம். இவர்களில் சிலர் போதை தலைக்கேறியதும் மனித தன்மையை இழந்தவர்களாக எவ்வித காரணமும் இன்றி பாட்டில்களை உடைத்து வீசுகின்றனர். சில இடங்களில் விளைநிலத்தில் அத்துமீறி அமர்ந்து குடிப்பவர்களை அப்புறப்படுத்த முயலும்போது விவசாயிகளும் தாக்கப்படுகின்றனர். உடைந்த பாட்டில் கண்ணாடி துண்டுகள் அப்பகுதிக்கு செல்லும் ஆடு, மாடு,நாய் உள்ளிட்ட கால்நடைகளின் கால்களை பிளந்து பெரும் காயத்தை ஏற்படுத்துகிறது.
சில நேரம் விபரமறிய விளையாட்டுத்தனமான சிறுவர்கள் இவ்விடங்களில் கவனக்குறைவாக செல்லும்போது கால் பாதங்களில் படுகாயம் ஏற்படுகிறது. இந்த பாட்டில் சிதறல்களால் மனித ஆதரவற்ற நிலையில் வாழும் கால்நடைகள் வலியால் துடிப்பதும், அதற்கு யாரும் சிகிச்சை வழங்க முடியாத நிலையில் இருப்பதும் வேதனையான விஷயம். இந்த கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

