/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஏன் இந்த கொலை வெறி : டவுன் பஸ்கள் இயக்கத்தில் அதிகாரிகள் அலட்சியம் n பயணிகளை குழப்பும் புறநகர் பஸ்களால் பரிதவிப்பு

ADDED : செப் 12, 2024 05:22 AM

முக்கிய நகரங்களில் இருந்து சுற்று கிராமங்களுக்கான போக்குவரத்து வசதியாக அரசு டவுன் பஸ் சேவையை பெருமளவு மக்கள் நம்பி உள்ளனர். இதனை செயல்படுத்துவதில் போக்குவரத்து அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
பல வழித்தடங்களில் தனியார் பஸ் நிர்வாகங்களுக்கு ஆதரவாக டவுன் பஸ் இயக்கத்தை நிறுத்தி வைப்பது, வேறு வழித்தடத்தில் அனுப்புவது, பயணிகளை குழப்பும் வகையில் பச்சை நிற புறநகர் பஸ்களை இயக்குவது, மகளிர் கட்டணமில்லா பஸ் என்ற அறிவிப்பு ஸ்டிக்கர் இல்லாத நிலையில் இயக்குவது போன்ற பிரச்னைகள் அதிகரித்து வருகிறது.
இது தவிர டவுன் பஸ் வழித்தடங்களில் அறிமுகம் செய்யப்பட்ட நீல நிற புதிய பஸ்கள் முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்தப்படுவது, ரோடு சேதம், ரோட்டோரம் வளர்ந்த மரக்கிளைகள் இருப்பதாக காரணம்கூறி பஸ்கள் டிரிப்-கட் செய்வது வாடிக்கையாகி வருகிறது. இதனால் கிராம மாணவர்கள், அரசு, தனியார் நிறுவன மகளிர் தொழிலாளர் உரிய நேரத்தில் வேலைக்கு சென்று வர முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.மாவட்ட நிர்வாகம், அரசு டவுன் பஸ்கள் இயக்கத்தை முறைப்படுத்தி பயணிகளின் குழப்பும், அவதி ஏற்படுத்தும் பிரச்னைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும்.