/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஏன் இந்த குளறுபடி l ரேஷன் கடைகளுக்கு குறைந்தளவே பொருட்கள் ஒதுக்கீடு l இரு மாதமாக துவரம்பருப்பு வழங்காததால் மக்கள் அவதி

ADDED : மே 15, 2024 05:44 AM

மாவட்டத்தில் பொது விநியோகத் துறையின் கீழ் ஆயிரத்திற்கும மேற்பட்ட ரேஷன் கடைகள் ,பகுதிநேர ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. மாவட்ட புள்ளியல் அறிக்கையின்படி 6 லட்சத்து 70 ஆயிரத்து 128 ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கடைகளில் மாதம் தோறும் கார்டுதாரர்களுக்கு அரிசி, பச்சரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருள்கள் பொருளாதார நிலை ,ரேஷன் கார்டின் உறுப்பினர் எண்ணிக்கை ஏற்ப குறிப்பிட்ட அளவுகளில் வழங்கப்படுகிறது. மார்ச் , ஏப்ரல் மாதங்களில் பெரும்பாலான ரேஷன் கடைகளுக்கு கார்டு எண்ணிக்கை காட்டிலும் குறைவான அளவே துவரம் பருப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக ஏப்ரலில் ஒரு கடையில் ஆயிரம் கார்டுதாரர்கள் உள்ளனர் என்றால் 500 கார்டு தாரர்களுக்கு மட்டுமே பொருட்கள் ஒதுக்கப்பட்டதால் மீதமுள்ள கார்டுதாரர்கள் பருப்பு வாங்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
நடப்பு மாதமும் பல கடைகளுக்கு 10ம் தேதி வரையும் துவரம் பருப்பு வந்து சேரவில்லை.
இதனால் அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை மட்டும் பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர். பருப்புக்காக மக்களை அலைக்கழிக்கப்படும் நிலை தொடர்கிறது . விநியோகிக்கப்படும் பொருட்களை ஒரே நேரத்தில் வழங்காமல் தட்டுப்பாட்டுடன் வழங்குவதால் ஒரு பொருள் வாங்க இரண்டு முறை ரேஷன் கடைகள் சென்று காத்திருந்து வாங்க வேண்டிய அவல நிலையும் உள்ளது. பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.