ADDED : ஏப் 14, 2024 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் சுற்றுப்பகுதியில் நேற்று மாலை அதிகமாக காற்று வீசியது.
இதில் திண்டுக்கல் காமராஜபுரத்தில் சனீஸ்வரர் கோயில் அருகே நின்ற தென்னை மரம் அருகில் உள்ள வீட்டின் மீது விழுந்தது.
வீட்டின் அருகே நின்ற டூ வீலர் சேதமானது. திண்டுக்கல் தீயணைப்பு துறையினர் தென்னை மரத்தை இயந்திரங்களால் துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர்.

