/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான ரோட்டில் தத்தளிக்கும் விவசாயிகள் டூவீலர்களை உருட்டி செல்லும் அவலம்
/
சேதமான ரோட்டில் தத்தளிக்கும் விவசாயிகள் டூவீலர்களை உருட்டி செல்லும் அவலம்
சேதமான ரோட்டில் தத்தளிக்கும் விவசாயிகள் டூவீலர்களை உருட்டி செல்லும் அவலம்
சேதமான ரோட்டில் தத்தளிக்கும் விவசாயிகள் டூவீலர்களை உருட்டி செல்லும் அவலம்
ADDED : செப் 12, 2024 05:24 AM

வேடசந்தூர்: புதுவாணிக்கரைக்கு செல்லும் தார் ரோடு சேதமடைந்துள்ள நிலையில் ரோட்டை புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வேடசந்துார் ஒன்றியம் பாலப்பட்டி ஊராட்சி பாலப்பட்டியில் இருந்து பெருமாள் நாயக்கனுார் வழியாக தார் ரோடு செல்கிறது. இந்த ரோட்டில் புதுவாணிக்கரையிலிருந்து பழைய வணிகரைக்கு 3 கி.மீ., துாரம் தார் ரோடு செல்கிறது. இந்த ரோடு அமைத்து 15 ஆண்டுகளுக்கு மேலாவதால் தற்போது இந்த ரோடு சேதம் அடைந்து கற்கள் பெயர்ந்து நடப்பதற்கே பயனற்றுள்ளது.
இந்த வழித்தடத்தில் தான் பள்ளி கல்லுாரி மாணவர்கள் மட்டுமின்றி டூவீலர்கள், வாகனங்களில் விவசாயிகளும் சென்று வருகின்றனர். வாரச் சந்தைகளுக்கு தக்காளி, முருங்கை உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வதிலும் சிரமப்படுகின்றனர். இது மட்டுமின்றி காலை, மாலை நேரங்களில் பால்வேன், பள்ளி கல்லுாரி வாகனங்கள், நுாற்பாலைகளுக்கான வேன்கள் என தொடர்ந்து போக்குவரத்து நிறைந்த பகுதியாக உள்ளது. இந்தப் பகுதியில் செல்லும் தார் ரோடு சேதமடைந்துள்ளதால் ரோட்டை புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
டூவீலரை தள்ளுகிறோம்
பி.கோவிந்தராஜ், விவசாயி பெருமாள்நாயக்கனுார்: ரோடு சேதத்தால் டூவீலரில் செல்வது கூட சிரமமாக உள்ளது. குடும்பத்துடன் டூவீலரில் சந்தைக்கு சென்று வந்தால் கூட இந்த ரோட்டிற்கு வந்தவுடன் கீழே இறங்கி வண்டியை தள்ளிக் கொண்டு தான் வருவேன். ரோடு அவ்வளவு மோசமாக உள்ளது. ரோட்டை தார் ரோடாக புதுப்பித்தால் மக்கள் நலம் பெறுவர்.
வந்து செல்வதற்கு சிரமம்
ஆர்.பொன்னுச்சாமி, விவசாயி, வாணிக்கரை: ரோடு அமைத்து 10 ஆண்டுக்கு மேலாகிறது. உற்பத்தியாகும் காய்கறிகளைக் கூட டூவீலர்களில் வைத்து வாரச் சந்தைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இந்த பகுதியில் ஒரு விசேஷம் என்றாலும் மக்கள் வந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். மக்கள் ரோட்டை பயன்படுத்த முடியாமல் நீண்ட காலமாக கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.
கே.கந்தசாமி, விவசாயி, வாணிக்கரை : விவசாய நிலங்களுக்கு தேவையான குப்பையை டிராக்டரில் ஏற்றி செல்லும் போது ரோடு சேதத்தால் வழித்தடத்தில் கால்வாசி குப்பை ரோட்டில் தான் கிடக்கும். காரணம் ரோடு அவ்வளவு சேதமடைந்த நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் எப்படி பயணிக்க முடியும். ரோட்டை புதுப்பிக்க மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும் என்றார்.