/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வடமதுரை அருகே பெண் வெட்டிக் கொலை
/
வடமதுரை அருகே பெண் வெட்டிக் கொலை
ADDED : மே 29, 2024 04:43 AM
வடமதுரை, : வடமதுரை அருகே குடிநீர் விற்பனை தொழில் போட்டி முன்விரோதத்தில் நீர் விற்பனை கட்டமைப்பை சேதப்படுத்த வந்த கும்பல் குறித்த தகவலை சம்பந்தபட்டவருக்கு கூறியதால் பெண் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
தென்னம்பட்டி எரியோடு ரோடு பகுதியை சேர்ந்தவர் பைரவன் 32. இவரது மனைவி பார்வதி 28. தென்னம்பட்டி எலப்பார்பட்டி சந்திரன் இடத்தில் வாடகைக்கு தங்கி உள்ளனர். இங்கு சந்திரன் ஆழ்துளை கிணறு அமைத்து நீர் எடுத்து விற்பனை செய்கிறார். நீர் விற்பனை தொழில் போட்டி தகராறில் எலப்பார்பட்டியை சேர்ந்த கனகராஜ், சந்திரன் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
கனகராஜ் தரப்பை சேர்ந்த இருவர் சந்திரனின் நீர் விற்பனை கட்டமைப்பை சேதம் செய்யும் நோக்கில் நேற்று மாலை அங்கு வந்தனர். அங்கிருந்த பார்வதி உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். ஆத்திரமடைந்த அவர்கள் பார்வதியை வெட்டி கொலை செய்தனர். கொலையாளிகளை போலீசார் தேடுகின்றனர்.