/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெண் மானபங்கம்: ஓய்வு இன்ஸ்பெக்டர் இரு போலீசாருக்கு சிறை தண்டனை
/
பெண் மானபங்கம்: ஓய்வு இன்ஸ்பெக்டர் இரு போலீசாருக்கு சிறை தண்டனை
பெண் மானபங்கம்: ஓய்வு இன்ஸ்பெக்டர் இரு போலீசாருக்கு சிறை தண்டனை
பெண் மானபங்கம்: ஓய்வு இன்ஸ்பெக்டர் இரு போலீசாருக்கு சிறை தண்டனை
ADDED : பிப் 26, 2025 02:20 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பெண்ணை விசாரணைக்கு அழைத்து சென்று மானபங்கம் செய்த வழக்கில் ஓய்வு இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி, ஓய்வு பெற்ற 2 போலீசாருக்கு தலா 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து முதன்மை சார்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
செம்பட்டி சேடப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் பக்கத்து வீட்டில் 2001ல் நகை திருடு போனது. அப்போது செம்பட்டி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ரெங்கசாமி, போலீஸ்காரர்களாக பணிபுரிந்த வீரத்தேவர், சின்னத்தேவர் ஆகியோர்கூலித்தொழிலாளியின் மனைவியை2001 பிப்., 20 அதிகாலை 2:00 மணிக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை அவர்கள் மானபங்கப்படுத்தினர். மாலை அவரை வீட்டிற்கு அனுப்பினர்.
இதில் மனமுடைந்தகூலித்தொழிலாளியின் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர். இதைதொடர்ந்துஅவருக்குநடந்த கொடுமைகளைதொழிலாளிதிண்டுக்கல் ஆர்.டி.ஓ.,விடம் புகாராக அளித்தார். அவர் 40 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு செய்தார்.
விசாரித்த நீதிபதி இவ்வழக்கை திண்டுக்கல் முதன்மை சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றினார். மூவரும் பணியிலிருந்து ஓய்வு பெற்றனர். இவ்வழக்கில் மூவருக்கும் தலா 9 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீபா தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சண்முகபார்த்தீபன் ஆஜரானார்.