ADDED : ஆக 22, 2024 03:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: தானம் அறக்கட்டளை கள்ளிமந்தையம் வட்டார களஞ்சியம் சுய உதவி குழுக்கள் ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்தது.
சுய உதவி குழு உறுப்பினர்கள் முளைப்பாரி, கலசம் ,மாவிளக்கை ஊர்வலமாக எடுத்து வந்தனர். மண்டல ஒருங்கிணைப்பாளர் தேவனேசன் தலைமை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், வட்டாரத் தலைவர் மாரியம்மாள் முன்னிலை வகித்தனர். வட்டாரப் பொருளாளர் சுமதி ஆண்டறிக்கை வாசித்தார்.