/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மகளிர் போலீசாரை கண்டித்து பெண் தர்ணா போராட்டம்
/
மகளிர் போலீசாரை கண்டித்து பெண் தர்ணா போராட்டம்
ADDED : மார் 04, 2025 05:21 AM
வடமதுரை: வேடசந்துார் சுக்காம்பட்டி நால்ரோடைச் சேர்ந்தவர் மணிமுருகன் 30. இவருக்கும் நரசிங்கபுரம் மகாலட்சுமிக்கும் 22, திருமணம் 2021ல் நடந்தது.
தற்போது 2 வயதில் மகன் உள்ளார்.
இந்நிலையில் மணிமுருகன் குடும்பத்தினர் 5 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதுடன் பணம் வாங்கி வராவிடில் மாமனாரின் பாலியல் இச்சைக்கு உடன்பட வேண்டும் என வற்புறுத்துவதாக மகாலட்சுமி 2024 ஜூனில் வடமதுரை மகளிர் போலீசில் புகாரளித்தார்.
எதிர்மனுதாரர்களுக்கு சாதகமாக செயல்படும் நோக்கில் போலீசார் ஒவ்வொரு முறையும் ஏதாவது காரணங்களை குறிப்பிட்டு தாமதம் செய்து வருவதாக கூறி மகாலட்சுமி, குடும்பத்தினர், மார்க்சிஸ்ட் கிளை செயலாளர் காளிதாஸ் ஆகியோருடன் சேர்ந்து நேற்று காலை வடமதுரை மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முன் ரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இன்ஸ்பெக்டர் திலகா, இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து வருகின்றனர்.