ADDED : ஜூலை 14, 2024 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோதைமங்கலம், கோதீஷ்வரர் கோயிலில் நேற்று வருடாபிஷேகம் நடந்தது. புனிதநீர் நிரப்பிய கலசங்களுடன் சிறப்பு யாக பூஜை , சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
இது போல் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காமராஜர் நகர் உஜ்ஜைனி மாகாளியம்மன் கோயிலில் நேற்று வருடாபிஷேகம் நடந்தது. புனிதநீர் நிரப்பிய கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜை, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது.