sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திண்டுக்கல் மாவட்டத்தில் யோகா தின கொண்டாட்டம்

/

திண்டுக்கல் மாவட்டத்தில் யோகா தின கொண்டாட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் யோகா தின கொண்டாட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் யோகா தின கொண்டாட்டம்


ADDED : ஜூன் 23, 2024 04:26 AM

Google News

ADDED : ஜூன் 23, 2024 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் அறிவுத்திருக்கோயில் சார்பில் யோகா பயிற்சி நடந்தது.

இந்திராகாந்தி திறந்தநிலைபல்கலை.,ஜி.டி.என்.கல்லுாரி,எஸ்.எஸ்.எம்.கல்லுாரி,வேதாத்திரி மகரிஷி பள்ளி,அச்யுதா பள்ளி,செயின்ட் பிரான்சிஸ் பள்ளி,அக் ஷயா மெட்ரிக் பள்ளி,கென்னடி பள்ளி,ஸ்ரீ காமராஜர் பள்ளி,வேலம்மாள் வித்யாலயா பள்ளி,தாடிக்கொம்பு அரச மேல்நிலைப்பள்ளி,வேடசந்துார் ஈஸ்ட்மென் டெக்ஸ்டைல் மில் நிறுவனத்தை சேர்ந்த மாணவர்கள்,ஆசிரியர்கள் என 5123 பேருக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.அறிவுத்திருக்கோயில் மூத்த பேராசிரியர் எம்.கே.தாமோதரன்,மூத்த பேராசிரியர் நளினி,ஆசிரியர்கள் பாலசுந்தர், மதிவாணன், சரவணன், முருகேசன், சவுந்திரராஜன், சேதுராமன், இளங்கோவன், நாகராஜன், மாதவன்,நடராஜன், சண்முகபிரியா, சிலம்பரசி, சங்கீதா, அமுதாராணி,பஞ்ச வர்ணம், தேவிகாகுமாரி, நளினி,சங்கரி, விஜயலட்சுமி, உஷா,ரங்கநாயகி,சித்ரகலா,மகிளாமலர் பயிற்சிகொடுத்தனர்.

* சக்தி கல்லுாரியில் முதல்வர் தேன்மொழி ,எஸ்.எஸ்.எம்.,கல்லுாரியில் முதல்வர் செந்தில்குமாரன் ,செயின்ட் பிரான்சிஸ் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் இ.என்.,பழனிசாமி தலைமை வகித்தனர். முதல்வர் வேணுகோபால் முன்னிலை வகித்தார்.

கென்னடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் சலீமா பேகம் தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி முகமது ரபீக்,முதல்வர் முத்துசாமி,துணை முதல்வர் கார்த்திக் முன்னிலை வகித்தனர்.

ஸ்ரீ காமராஜர் மெட்ரிக் பள்ளியில் செயலாளர் ராமலிங்கம்தலைமை வகித்தார். முதல்வர் லதா,நிர்வாக அதிகாரி அகிலன் முன்னிலை வகித்தனர்.

வேலம்மாள் வித்யாலயாவில் சீனியர் முதல்வர் நயனாசவுரி,முதல்வர் அசோக் தலைமை வகித்தனர்.

தாடிக்கொம்பு அரசு உயர் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பானுரேகாதலைமை வகித்தார். ஈஸ்ட்மென் மில்லில் மூத்த துறை தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.

உலகளாவிய அமைதி பீடம் குண்டலிநீ கிரியா யோகா சார்பில் யோகா பயிற்சி நடந்தது.

ஏராளமானோர் பங்கேற்று யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

* திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் செயலாளர்கள் மங்களராம், காயத்ரி மங்களராம் தலைமை வகித்தனர்.

9ம் வகுப்பு மாணவன் நிகிலேஷ் வரவேற்றார். ஆசிரியை விமலா தலைமை விருந்தினரை அறிமுகம்செய்தார். கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரி முதுநிலை வணிக நிர்வாகத்தில் துறைத்தலைவர் டாக்டர் ராஜேஷ் குமார், சிறப்பு விருந்தினரான உலக சமூதாய சேவா சங்க துணைத் தலைவர் தாமோதரன் பேசினர். திண்டுக்கல் யங் இந்தியாவில் பணிபுரியும் சசிகுமார் ஸ்ரீதரன், கிளை தலைவர் வினோத் பாலசுந்தர் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். யோகா ஆசிரியர் பிரசாத் சக்ரவர்த்தி, அறிவுத்திருக்கோயில் யோகா ஆசிரியர்கள் பயிற்சி அளித்தனர். திண்டுக்கல் யங் இந்தியாவின் இணைத்தலைவர் கிருத்திகா பழனிசாமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி முதன்மை முதல்வர் டாக்டர் சந்திர சேகரன் தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள் ஞானப்பிரியதர்ஷினி, வித்யா, மணிமேகலை, பிரபா, பத்மநாபன், ராஜசுலோக்சனா, ஒழுங்கு ஒருங்கிணைப்பாளர் பிரசாத் சக்கரவர்த்தி, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், ஆசிரிய ஆசிரியைகள் மேலாளர் பிரபாகரன், ஜான் கிரிஸ்டோபர், ராஜசேகர், பிரபு செய்தனர்.

* பழனி அக் ஷயா சி.பி.எஸ்.இ பள்ளியில் நிர்வாகி புருஷோத்தமன் தலைமை வகித்தார். மாணவர்கள் வ பல்வேறு யோகாசனங்கள் செய்து காட்டினர்.

தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபிராமன், பள்ளி முதல்வர் மங்கயர்க்கரசி கலந்து கொண்டனர்.

*பழநி பாரதி வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு நுாற்றுக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்ற யோகா பயிற்சியை பள்ளி செயலர் குப்புசாமி துவங்கி வைத்தார்.

பழநி மனவளக்கலை மன்ற திட்ட அலுவலர் தேவி ஜான்சி ராணி பயிற்சி வழங்கினார். பள்ளி முதல்வர் கதிரவன், நிர்வாக அலுவலர் சிவகுமார் பங்கேற்றனர்.

* -கோபால்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட், நேரு யுவ கேந்திரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பாரதிய சுவாமி விவேகானந்தர் யோகா விளையாட்டு சங்கம் இணைந்து சர்வதேச யோகா தின விழாவை நடத்தினர்.

சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருப்பதி வரவேற்றார்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்யநாராயணன் தலைமை வகித்தார்.

நேரு யுவ கேந்திரா இளையோர் அலுவலர் சரண் வி. கோபால், பாரதிய சுவாமி விவேகானந்தா யோகா விளையாட்டுச் சங்கம் தலைவரும் பயிற்சியாளருமான தனலட்சுமி முன்னிலை வகித்தனர்.

சில்ரன் சாரிடபிள் ட்ரஸ்ட் தேனி ஒருங்கிணைப்பாளர் பேச்சியப்பன் ,மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம்,ஆசிரியர் பிரேமலதா பேசினர்.

ஆசிரியர் - ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us