நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: கோபால்பட்டி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏ.பி.ஜே.,அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை,சென்னை தேசிய குற்ற புலனாய்வு நிறுவனம், திண்டுக்கல் மாஸ் லயன்ஸ் சங்கம் இணைந்து சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு யோகா பயிற்சி நடந்தது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரிட்டோ லீனஸ் ராஜ் தலைமை வகித்தார்.
ஸ்ரீபாலாஜி ஓட்டுநர் பயிற்சி பள்ளியின் உரிமையாளர் ராம்குமார் முன்னிலை வகித்தார்.
அறக்கட்டளை நிறுவனர் மருதைகலாம் வரவேற்றார். லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சுந்தரராஜன்,செந்தில்குமார், விஜய் கண்ணன் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், ஜாமென்ட்ரி பாக்ஸ் வழங்கப்பட்டது. ஆசிரியை டெஸ்சிராணி நன்றி கூறினார்.