ADDED : மே 04, 2024 06:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகர் அரசு போக்குவரத்து பஸ் டிப்போவில் அரசு பஸ் ஓட்டுனர்களுக்கு மனஅழுத்தம் குறைக்கும் இயற்கை, யோகா பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி மருதுவர் ஹம்ச லட்சுமி தலைமையில் நடந்தது.
மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு துறை சித்த மருத்துவ அலுவலர் கலா முன்னிலை வகித்தார். ஆயுஷ் மருந்து பாதுகாப்பு துறை மருத்துவர் பாலமுருகன் பேசினார். ஊழியர்களுக்கு யோகாசன செயல்முறை விளக்கம் அளிக்க பட்டது. போலி மருத்துவர்கள் பற்றிய தகவல்கள் தரும்படி ஊழியர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.