/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
10 நாட்களுக்கு முன்பு முருங்கை கிலோ ரூ.85, தற்போது ரூ.43; வரத்து அதிகரிப்பால் சரிந்த முருங்கை விலை

ADDED : மே 20, 2025 01:12 AM
ஒட்டன்சத்திரம்; திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் 10 நாட்களுக்கு முன் கிலோ ரூ.85க்கு விற்ற முருங்கை, வரத்து அதிகரிப்பால் விலை சரிந்து கிலோ ரூ.43 க்கு விற்பனையானது.
ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, கப்பலபட்டி, கள்ளிமந்தையம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம், மூலனுார் பகுதிகளில் முருங்கைக்காய் அதிகமாக பயிரிடப்படுகிறது. 10 நாட்களுக்கு முன்பு முருங்கைக்காய் வரத்து குறைவாக இருந்ததால் கிலோ ரூ.85 க்கு விற்பனையானது.
தற்போது பல இடங்களில் அறுவடை மும்முரமாக இருப்பதால் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளது. உள்ளூர் பகுதியில் விளைந்த முருங்கை தேவையான அளவிற்கு கிடைத்ததால் வெளி மாநில வியாபாரிகளும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கையை கொள்முதல் செய்யவில்லை. தேவைக்கு அதிகமாக வரத்து உள்ளதால் விலையும் சரிவடைந்து கிலோ ரூ.43 க்கு விற்பனையானது.