/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விபத்தில் பக்தர்கள் 10 பேர் காயம்
/
விபத்தில் பக்தர்கள் 10 பேர் காயம்
ADDED : ஜூலை 12, 2025 04:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாமிநாதபுரம் : பழநி அருகே புஷ்பத்துார் பகுதி நான்கு வழிச் சாலையில் கேரள பக்தர்கள் வந்த வேன் கவிழ்ந்ததில் 10 பேர் காயமடைந்தனர்.
பழநி முருகன் கோயிலுக்கு கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஏழு பெண்கள், இரு குழந்தைகள் ஆறு ஆண்கள், டிரைவர் என 15 பேர் வேன் மூலம் வந்தனர்.
டிரைவர் ஸ்ரீசாகு 29 , ஓட்டினார். நேற்று காலை புஷ்பத்துார் அருகே கோவை -திண்டுக்கல் நான்கு வழி சாலையில் வரும்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. 10 பேர் காயம் அடைந்தனர். சாமிநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

