ADDED : அக் 13, 2025 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : -நத்தம் அருகே சிறுகுடி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து 50.
இவரது வீட்டின் அருகில் நேற்று முன்தினம் இரவு 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. நத்தம் தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு பகுதியில் இருந்த மலைப்பாம்பை பொதுமக்கள் உதவியுடன் பிடித்தனர். பின் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.