/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலி ஆவணங்களுடன் வந்த ஆம்னி பஸ் பறிமுதல் ரூ.10 லட்சம் அபராதம்
/
போலி ஆவணங்களுடன் வந்த ஆம்னி பஸ் பறிமுதல் ரூ.10 லட்சம் அபராதம்
போலி ஆவணங்களுடன் வந்த ஆம்னி பஸ் பறிமுதல் ரூ.10 லட்சம் அபராதம்
போலி ஆவணங்களுடன் வந்த ஆம்னி பஸ் பறிமுதல் ரூ.10 லட்சம் அபராதம்
ADDED : நவ 06, 2024 02:33 AM

திண்டுக்கல்:ஐதரபாத்திலிருந்து மதுரைக்கு போலி ஆவணங்களோடு வந்த ஆம்னி பஸ் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு டோல்கேட்டில் வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் சிக்கியது. ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு பஸ்சும் பறிமுதல் செய்யப்பட்டது.
வெளி மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து வரும் ஆம்னி பஸ்கள் முறையான ஆவணங்களின்றி இயக்கப்படுவதாக திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து சிவக்குமார் தலைமையிலான பறக்கும்படையினர் கொடைரோடு டோல்கேட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஐதரபாத்திலிருந்து மதுரைக்கு 30 பயணிகளுடன் ஆம்னி பஸ் வந்தது. ஆவணங்களை சரிபார்த்த போது படுக்கை வகையிலான சீட் இருப்பதை 2016லிருந்து மறைத்து அமர்ந்து செல்லும் வகையிலான சீட்கள் என போலி ஆவணங்களை தயாரித்து பயன்படுத்தி உள்ளனர். இதை கண்டறிந்த அதிகாரிகள் ரோடு வரி செலுத்தாதது உட்பட பல்வேறு விதிமீறல்களுக்காக ரூ.10 லட்சம் அபராதம் விதித்து பஸ்சையும் பறிமுதல் செய்தனர். பயணிகளை வேறு பஸ்சில் மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.