/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
100 நாள் ஒப்பந்தப்பணி நிதி நிறுத்திவைப்பு.. சபாஷ்...சரியான முடிவு! பணிகள் தரம் குறித்த புகாரால் நடவடிக்கை

ADDED : நவ 13, 2025 12:27 AM

மாவட்டத்தில் 2023- -24, 2024 --25 ஆண்டுகளில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் செக் டேம், பேவர் பிளாக் ரோடு, மெட்டல் மண் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் வெகு வேகமாக நடைபெற்றன. ஊராட்சி நிர்வாகங்களின் கடைசி காலகட்டத்தில் ஊராட்சி நிர்வாகங்களை கலந்து ஆலோசிக்காமலே அந்தந்த ஒன்றிய நிர்வாகங்கள், மக்கள் பிரதிநிதிகள் சார்பில் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்றன.
இப்பணிகள் தரம் குறித்து புகார் எழுந்ததால் ஒப்பந்தகாரர்களுக்கு இன்று வரை இதற்கான பணி நிதி வழங்கவில்லை. இப்பணிகளில் ஈடுபட்ட 100 நாள் தொழிலாளர்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கு சென்றடைய வேண்டிய நிதி வழங்கவில்லை என்ற குமுறல் ஒரு புறமும், பணிகளின் தரமே சரி இல்லை என்ற புகார் மறுபுறமும் எழுந்துள்ளது குறிப்பிட தக்கது.பணிகளின் தரத்தை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் மக்களிடம் எழுந்துள்ளது.