/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சம்பளம் பெற முடியாமல் அவதி
/
100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சம்பளம் பெற முடியாமல் அவதி
100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சம்பளம் பெற முடியாமல் அவதி
100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சம்பளம் பெற முடியாமல் அவதி
ADDED : பிப் 05, 2024 12:43 AM

திண்டுக்கல் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏரி, குளம், வாய்க்கால் அமைத்தல், பண்ணை குட்டை அமைத்தல், நீர் உறிஞ்சுதல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் லட்சக்கணக்கான பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.
ஊதியம் நேரடியாக பணியாளர்களின் வங்கி 1 கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 306 ஊராட்சிகளில் பணியாற்றக்கூடிய சுமார் 2 லட்சத்திற்கு மேற்பட்ட பணியாளர்களுக்கு கடந்த 1 மாத காலமாக முக - அடையாள அங்கீகாரம் என்னும் செயலி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செயலி - மூலம் தினமும் புகைப்படம் பதிவு செய்ய வேண்டும். பணி நேரத்தில் சோர்வடைந்து காணும் போது புகைப்படம் எடுக்கும் போதும். கண் அசைத்தாலும் ஆதாரில் உள்ள புகைப்படத்திற்கும் இதற்கும் வேறுபாடு இருப்பதாக கூறி பணியாளர்களுக்கு ஆப்சென்ட் 1 போடப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 3 மாதமாக சம்பளமும் நிலுவையில் உள்ளதால் வாழ்வாதாரத்தில் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே 100 நாள் வேலை திட்ட பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பழைய நடை முறையை அமுல்படுத்த வேண்டும். இப்பிரச்னை மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

