ADDED : ஆக 23, 2026 08:20 PM
அ நிறம் | அளவு
நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் தென்மேற்கு மாவட்டச் செயலாளர் அய்யனார் எம்.எல்.ஏ., தலைமையில் த.வெ.க., அரசின் 100 நாட்கள் சாதனை விளக்கக் கூட்டம் நடந்தது.
மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தமிழக அரசு 100 நாட்களில் செய்யப்பட்ட திட்டங்கள் குறித்து எம்.எல்.ஏ., பேசினார். நிலக்கோட்டை, வத்தலக்குண்டு ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டம் துவங்குவதற்கு முன்னதாக கூட்டத்திற்கு வந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்து, கட்சி பாடலுடன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
