/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நல்லுார் கரைய கருப்பசுவாமிக்கு 100 ஆடுகளை வெட்டி படையல்-
/
நல்லுார் கரைய கருப்பசுவாமிக்கு 100 ஆடுகளை வெட்டி படையல்-
நல்லுார் கரைய கருப்பசுவாமிக்கு 100 ஆடுகளை வெட்டி படையல்-
நல்லுார் கரைய கருப்பசுவாமிக்கு 100 ஆடுகளை வெட்டி படையல்-
ADDED : ஜூலை 31, 2025 03:30 AM

நத்தம்,: கோட்டையூர் நல்லுாரில் கரையகருப்பசுவாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற ஆடி படையல் விழா நடந்தது.
இதையொட்டி ஊரின் அருகே கண்மாய் கரையில் உள்ள கரைய கருப்புசுவாமிக்கு வர்ண பூமலர்களால் சிறப்பு அலங்காரம் செய்ய அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 100 ஆடுகள் கிராமத்தார்கள் மூலம் வெட்டப்பட்டு சுவாமிக்கு படையல் போடபட்டது.
60 சிப்பம் அரிசியை கொண்டு 15 -க்கு மேற்பட்ட அண்டாக்களில் சாதம் தயார் செய்யப்பட்டு கறி குழம்புடன் அன்னதானம் வழங்கப் பட்டது. சுற்று கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நல்லுார் கிராமத்தினர் செய்திருந்தனர்.
குட்டுப்பட்டி: குட்டுப்பட்டியில் உச்சிகாளியம்மன் கோயிலில் ஆடி திருவிழா நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்ய அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோயில் முன்பாக பொங்கல் வைக்கப்பட்டு பக்தர்கள் நேர்த்திகடனாக கொடுத்த 10க்கும் மேற்பட்ட ஆடுகள், 40-க்கும் மேற்பட்ட கோழிகள் பலியிடப்பட்டு சுவாமிக்கு படையல் போடப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.