/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோயில்களில் 1008 சங்காபிஷேகம்
/
கோயில்களில் 1008 சங்காபிஷேகம்
ADDED : நவ 25, 2025 04:16 AM

நத்தம்: -நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை மாத 2வது சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேக விழா நடந்தது.
இதையொட்டி கோயில் வளாகத்தில் தாமரை சங்கு வடிவிலும் 1008 சங்குகள் அமைக்கப்பட்டு வில்வ இலைகள், புஷ்பங்களால் அலங்கரிங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடந்தது. மூலவர் கைலாசநாதர்- செண்பகவள்ளி அம்மனுக்கு பால், பழம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதைப்போல் அய்யாபட்டியாபட்டி சிவதாண்டவப்பாறை ருத்ர லிங்கேஸ்வரர் கோயில், காம்பார்பட்டி 1008 சிவன் கோயில்,குட்டூர்- உண்ணாமுலை அம்பாள் கோயிலில் கார்த்திகை மாத 2-வது சோம வாரத்தை முன்னிட்டு 108 சங்குகள் அமைக்கப்பட்டு சங்காபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து மூலவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்ய பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

