/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கத்தியுடன் பள்ளிக்கு வந்த 10 ம் வகுப்பு மாணவர் கைது
/
கத்தியுடன் பள்ளிக்கு வந்த 10 ம் வகுப்பு மாணவர் கைது
கத்தியுடன் பள்ளிக்கு வந்த 10 ம் வகுப்பு மாணவர் கைது
கத்தியுடன் பள்ளிக்கு வந்த 10 ம் வகுப்பு மாணவர் கைது
ADDED : டிச 13, 2024 03:06 AM
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் சக மாணவர்களை மிரட்டுவதற்காக கத்தியுடன் வந்த 10 ம் வகுப்பு மாணவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி இ.பி.,காலனியை சேர்ந்த 15 வயது மாணவர் பழநி ரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். சில நாட்களுக்கு முன் இவருக்கும் உடன் படிக்கும் சில மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. மற்றவர்களை மிரட்டுவதற்காக 15 வயது மாணவர் கத்தியுடன் பள்ளிக்கு வந்துள்ளார். மற்ற மாணவர்கள் ஆசிரியர்களிடம் தெரிவிக்க அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் வினோதா, எஸ்.ஐ.,மலைச்சாமி தலைமையிலான போலீசார் 15 வயது மாணவரை கைது செய்தனர்.