/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி யில் கஞ்சா விற்ற 11 பேர் கைது
/
பழநி யில் கஞ்சா விற்ற 11 பேர் கைது
ADDED : மார் 22, 2025 04:30 AM
பழநி: பழநி பகுதியில் கஞ்சா விற்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
பழநி நெய்க்காரப்பட்டி அருகே சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் மகாராஜன் 33 .
கஞ்சா விற்ற இவரை தாலுகா போலீசார் கைது செய்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ராமநாத நகரை சேர்ந்த துர்க்கை பிரசாத் 21, மயிலாடும்பாறையை சேர்ந்த தனுஷ் 21 தெற்கு அண்ணா நகரை சேர்ந்த மனோஜ் குமார் 24 ,ஆகியோர் மதனபுறம் பள்ளி பின்புறம் கஞ்சா விற்றனர். அடிவாரம் போலீசார் 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்தனர்.
பழநி நகராட்சி மேல்நிலைப்பள்ளி பின்புறம் தெற்கு அண்ணா நகரை சேர்ந்த பாண்டி 21, காமராஜர் நகரை சேர்ந்த பால்ராஜ் 22, சங்கிலி தேவர் சந்துவை சேர்ந்த தனுஷ் 21, சிவகிரி பட்டியைச் சேர்ந்த முத்தையா 28, மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த விருமாண்டி 37, சிவகங்கை மாவட்டம் தேவப்பட்டுவை சேர்ந்த திருச்செல்வம் 21, கல்லல் பகுதியை சேர்ந்த சிவமணி 21.
ஆகியோரிடமிருந்து 500 கிராம் கஞ்சவை பறிமுதல் செய்த டவுன் இன்ஸ்பெக்டர் மணிமாறன் அனைவரையும் கைது செய்தார்.