தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வில் 1191 பேர் ‘ஆப்சென்ட்’
தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வில் 1191 பேர் ‘ஆப்சென்ட்’
ADDED : செப் 19, 2026 07:04 PM
திண்டுக்கல், செப்.20
மாவட்டத்தில் நேற்று நடந்த ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணியிடங்களுக்கான தேர்வில் 1191 தேர்வர்கள் ‘ஆப்சென்ட்’ ஆகினர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் 10 தேர்வு மையங்களில் நடந்தது. மொத்தம் 2776 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் 1,585 தேர்வர்கள் பங்கேற்றனர். 1191 பேர் தேர்வில் பங்கேற்காமல் ‘ஆப்சென்ட்’ ஆகினர்.
திண்டுக்கல் ஆர்.எம்.காலனி ஜான்பால் மேல்நிலைப் பள்ளி, கோவிந்தாபுரம் வாசவி மெட்ரிக் பள்ளி, நேருஜி மேல்நிலைப் பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் கலெக்டர் துர்கா நேரில் ஆய்வு செய்தார்.
மேலும் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி தலைமையில் கண்காணிப்புகுழு, பறக்கும் படை அமைக்கப்பட்டு அனைத்து தேர்வு மையங்களும் கண்காணிக்கப்பட்டன. கூடுதலாக அனைத்து தேர்வு மையத்திற்கு ஆர்.ஐ., நிலையில் வருவாய்த்துறை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டும் கண்காணிப்பு பணிகள் நடந்தன.
