ADDED : செப் 19, 2026 07:05 PM
செம்பட்டி, செப்.20-
ஆத்துார் அரசு மருத்துவமனை சார்பில் செம்பட்டி பஸ் ஸ்டாண்டில் பால்வினை நோய்கள் குறித்த தகவல் கல்வி, தொடர்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. முதன்மை மருத்துவ அலுவலர் அரவிந்த நாராயணன் தலைமை வகித்தார். டாக்டர் சந்தோஷ்குமார், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட மாவட்ட மேற்பார்வையாளர் ஜெசிந்தா, மக்கள் திட்ட மாவட்ட மேற்பார்வையாளர் வினீஷ்குமார் முன்னிலை வகித்தனர். ஆத்துார் நம்பிக்கை மைய ஆலோசகர் கண்ணன் வரவேற்றார்.
ஆத்துார், செம்பட்டி பகுதிகளில் ஆட்டோக்கள், மினிபஸ் உள்ளிட்ட வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டினர். வாகன ஓட்டிகள், பயணிகளிடம் பால்வினை நோய்கள் குறித்த விழிப்புணர்வு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.
ஆய்வக நுட்பவியலாளர்கள் லோகநாயகி, ஜாக்குலின் ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
