/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
12 பேரிடம் ரூ.34 லட்சம் மோசடி; ஓ.பி.எஸ்., அணி நிர்வாகிகள் இருவர் தலைமறைவு
/
12 பேரிடம் ரூ.34 லட்சம் மோசடி; ஓ.பி.எஸ்., அணி நிர்வாகிகள் இருவர் தலைமறைவு
12 பேரிடம் ரூ.34 லட்சம் மோசடி; ஓ.பி.எஸ்., அணி நிர்வாகிகள் இருவர் தலைமறைவு
12 பேரிடம் ரூ.34 லட்சம் மோசடி; ஓ.பி.எஸ்., அணி நிர்வாகிகள் இருவர் தலைமறைவு
ADDED : நவ 27, 2024 04:49 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் உட்பட பல்வேறு அரசுத்துறைகளில் வேலை வாங்கி தருவதாக 12 பேரிடம் ரூ.34 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த இரு நிர்வாகிகளை போலீசார் தேடுகின்றனர்.
பழநி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஆத்திக்கண்ணன் 35. இவர் பழநியில் அழகுநிலையம் நடத்துகிறார். இவரிடம் 2023ல் அதே பகுதியை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட பொருளாளராக உள்ள மாதவத்துரை 39, கோவையைச் சேர்ந்த அந்த அணியின் மாநில அமைப்பு செயலாளர் கழில்ரகுமான் ஆகியோர் தங்களுக்கு பல அதிகாரிகளை தெரியும். அதன்மூலம் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழநி முருகன் கோயிலில் டிக்கெட் வழங்கும் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். அதை நம்பிய ஆத்திக்கண்ணனும் அவர்கள் கேட்ட போதெல்லாம் பணத்தை வழங்கினார். இதேபோல் பழநியை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 11 பேரிடம் அவர்கள் படிப்பிற்கு ஏற்றவாறு ஆசிரியர், வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.34 லட்சத்தை பெற்றனர்.
பணத்தை வழங்கியவர்கள் பணி நியமன உத்தரவு கேட்ட போது 2 பேரும் தலைமறைவாயினர். பிறகு ஏமாற்றப்பட்டதை உணர்ந்த 12 பேரும் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்.ஐ., முத்தமிழ் மற்றும் போலீசார் தலைமறைவான கழில்ரகுமான், மாதவத்துரையை தேடி வருகின்றனர். கழில் ரகுமான் மீது திண்டுக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இதேபோன்ற மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

