/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தேனி, திண்டுக்கல் வழக்குகளில் 1230 கிலோ கஞ்சா பறிமுதல்
/
தேனி, திண்டுக்கல் வழக்குகளில் 1230 கிலோ கஞ்சா பறிமுதல்
தேனி, திண்டுக்கல் வழக்குகளில் 1230 கிலோ கஞ்சா பறிமுதல்
தேனி, திண்டுக்கல் வழக்குகளில் 1230 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : பிப் 18, 2026 07:42 AM
திண்டுக்கல்: டி.ஐ.ஜி. சுவாமிநாதன் உத்தரவின்படி திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுகின்றனர். அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்படுகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 198 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 896 கிலோ 484 கிராம் கஞ்சா, திண்டுக்கல் ஆயுதப்படை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
தேனி மாவட்டத்தில் 92 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 333 கிலோ 329 கிராம் கஞ்சா ஆயுதப்படை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
பறிமுதலான 1,229 கிலோ 813 கிராம் கஞ்சாவை அழிக்க டி.ஜி.பி., (பொறுப்பு) உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருமாள்புரம் தனியார் நிறுவனத்துக்கு மொத்த கஞ்சாவும் கொண்டு செல்லப்பட்டு எரித்து அழிக்கப்பட்டது. டி.ஐ.ஜி. சுவாமிநாதன், எஸ்.பி., பிரதீப், டி.எஸ்.பி. கார்த்திக் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

