/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாற்றுத்திறனாளிகள் முகாமில் 12,944 பேர் பயன்
/
மாற்றுத்திறனாளிகள் முகாமில் 12,944 பேர் பயன்
ADDED : ஜூலை 27, 2025 12:21 AM
திண்டுக்கல்:''திண்டுக்கல்லில் மாற்றுத்திறானிகளுக்கான சிறப்பு முகாம் மூலமாக 12,944 பேர் பயனடைந்துள்ளதாக'' கலெக்டர் சரவணன் தெரிவித் துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் ஜூன் 26 முதல் ஜூலை 12 வரை அனைத்து வட்டாரங்களிலும் நடந்தன.
அரசின் பல்துறை நலத்திட்டங்கள் ஒரே இடத்தில் வழங்கப்பட்டன. 12,944 மாற்றுத்திறனாளிகள் மனு அளித்ததில் 8798 மனுக்கள் மீது தீர்வு காணப் பட்டன.
4146 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. மேலும் 199 மாற்றுத்திறனாளிகள் 335 உபகாரணங்களுக்கு தகுதி பெற் றுள்ளனர்.
இந்த முகாமில் 369 முதியோர் பயனடைந்து 1706 உபகரணங்களுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
527 புதிய அடையாள அட்டைகள், 231 புதுப்பித்தல் அடையாள அட்டைகள் என 758 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டன.
1000 பேருக்கு பஸ் பயண அட்டை, 650 பேருக்கு ரயில் பாஸ் வழங்கப் பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.