/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மின் பணிகளை தடுத்த 13 விவசாயிகள் கைது
/
மின் பணிகளை தடுத்த 13 விவசாயிகள் கைது
ADDED : மார் 01, 2024 06:24 AM

கள்ளிமந்தையம் : தனியார் காற்றாலை நிறுவனத்திற்காக உயர் அழுத்த மின்கம்பங்கள் அமைக்கும் பணிகளை தடுக்க முயன்ற அப்பியம்பட்டி விவசாயிகள் 13 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது பெண் விவசாயி ஒருவர் மயங்கி விழுந்தார்.
அப்பியம்பட்டியில் தனியார் காற்றாலைகள் பல உள்ளன. இவற்றிலிருந்து பெறப்படும் மின்சாரத்தை கொண்டு செல்வதற்காக நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்களில் அமைக்கப்படும் உயர் அழுத்த மின் கம்பங்களால் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் விவசாய விளை பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் இடையூறாக இருக்கும் என கூறி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று அப்பகுதியில் நடந்த மின் கம்பங்கள் அமைக்கும் பணிகளை விவசாயிகள் தடுத்து போராட்டம் நடத்தினர்.
ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி., முருகேசன் தலைமையிலான போலீசார் 6 பெண்கள் உட்பட 13 விவசாயிகளை கைது செய்தனர். அப்போது ஒரு பெண் மயங்கி விழுந்ததார். அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

