/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் பதட்டமான ஓட்டு சாவடிகள் 147; கலெக்டர்
/
திண்டுக்கல்லில் பதட்டமான ஓட்டு சாவடிகள் 147; கலெக்டர்
திண்டுக்கல்லில் பதட்டமான ஓட்டு சாவடிகள் 147; கலெக்டர்
திண்டுக்கல்லில் பதட்டமான ஓட்டு சாவடிகள் 147; கலெக்டர்
ADDED : மார் 02, 2024 05:42 AM

திண்டுக்கல் : ''திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டசபை தொகுதி வாரியாக 217 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பதட்டமான 147 ஓட்டு சாவடிகளில் விழிப்புடன் தேர்தல் பணியாற்ற வேண்டும் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்தார்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மண்டல அலுவலர்களுக்கான லோக்சபா தேர்தல் முன்னேற்பாடு பணி பயிற்சி வகுப்பு கூட்டத்தில் தலைமை தாங்கிய அவர் பேசியதாவது: லோக்சபா தேர்தல் பணிகளுக்கான சட்டவிதிமுறை கையேடுகளை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. இதை பின்பற்றி அதிகாரிகள் சரியான முறையில் திட்டமிடுதலுடன் செயல்பட வேண்டும்.
இதற்காக குழுக்கள் அமைக்க பட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில் 217 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தேர்தல் அலுவலர்கள் நியமிக்க பட்டுள்ளனர்.
மண்டல அலுவலர்கள் ஒதுக்கீடு செய்துள்ள ஓட்டுச்சாவடிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். ரோடு , வழி பாதைக்கான வரைபடம் தயாரிக்க வேண்டும். கட்டட உறுதி தன்மை, குடிநீர், மின்சாரம், கழிப்பறை வசதிகளை ஆய்விட்டு அறிக்கை அளிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், வயோதிகர்களுக்கான சாய்வுதளம், சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்திட வேண்டும். பதட்டமான ஓட்டு சாவடிகளாக கண்டறிய பட்டுள்ள 147 ஓட்டுச்சாவடிகளில் மிகுந்த விழிப்புடன் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும்.
வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு, அஞ்சல் ஓட்டுசீட்டு வழங்கும் பணிகளை கண்காணித்தல் வேண்டும் என்றார். எஸ்.பி., பிரதீப், டி.ஆர்.ஓ.,சேக்முகையதீன்,கலெக்டர் நேர்முக உதவியாளர் ராஜேஸ்வரி பங்கேற்றனர்.

