sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பழநி கோயில் படிப்பாதையில் 15 அடி உயர வேல் பிரதிஷ்டை

/

 பழநி கோயில் படிப்பாதையில் 15 அடி உயர வேல் பிரதிஷ்டை

 பழநி கோயில் படிப்பாதையில் 15 அடி உயர வேல் பிரதிஷ்டை

 பழநி கோயில் படிப்பாதையில் 15 அடி உயர வேல் பிரதிஷ்டை


ADDED : பிப் 09, 2026 05:16 AM

Google News

ADDED : பிப் 09, 2026 05:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி முருகன் கோயில் செல்லும் வழியில் உள்ள படிப்பாதையில் 7 டன் எடை, 15 அடி உயரமுள்ள கருங்கல்லில் செதுக்கப்பட்ட வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பழநியில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடந்த 'முத்தமிழ் முருகன்' மாநாட்டில் கருங்கல்லில் வேல் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 7 டன் எடையில் 15 அடி உயர வேல் ரூ.14.5 லட்சம் மதிப்பீட்டில் செதுக்கப்பட்டது. ஜன.,29ல் வேல் சிலை படிப்பாதை துவங்கும் பகுதியில் மங்கம்மாள் மண்டபத்திற்கு அடுத்துள்ள மயில் சிலைக்கு முன்புறம் அமைக்கப்பட்டது.

நான்கு அடி உயர பீடம் அமைக்கப்பட்டு முறைப்படி பிரதிஷ்டை செய்ய பிப்.,7 மாலை முதற்கால வேள்வி பூஜைகள் துவங்கின. நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜைகள் நடந்தன.

பின், பக்தர்கள் 'அரோகரா' கோஷம் முழங்க காலை 8:20 மணிக்கு பழநி முருகன் கோயில் அமர்ந்தலிங்க குருக்கள், செல்வ சுப்பிரமணியம் குருக்கள் புனித நீரை கலசங்களில் கொண்டு வந்து வேல் மீது ஊற்றி கும்பாபிேஷகம் செய்தனர்.

இதில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அறங்காவலர்கள், கோயில் உதவி கமிஷனர் லட்சுமி, பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us