/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தொழிற்சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
/
தொழிற்சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
ADDED : பிப் 09, 2026 05:22 AM

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சோசியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் சார்பில், மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. மண்டலத் தலைவர் சிக்கந்தர் தலைமை வகித்துப் பேசினார். எஸ்.டி.பி.ஐ., மாவட்டத் தலைவர் அபுதாஹிர் முன்னிலை வகித்தார். டிரேட் யூனியன் மாவட்டத் தலைவர் அபுதாஹிர், மாநில பொதுச் செயலாளர் ரவூப் நிசார் பங்கேற்றனர். 'தொழிலாளர் விரோத 4 சட்டத் திருத்த தொகுப்புகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களின் பாதுகாப்பு, உடல் நலத்தை உறுதிசெய்ய தேசிய அளவில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.
ஆட்டோக்களுக்கு ஒரு கி.மீ.,க்கு ரூ.25, குறைந்த பட்சம் கட்டணமாக ரூ.60 என, தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

