/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மலைப்பகுதியில் தகிக்கும் வெப்பம்: காட்டுத்தீ அபாயம்
/
மலைப்பகுதியில் தகிக்கும் வெப்பம்: காட்டுத்தீ அபாயம்
மலைப்பகுதியில் தகிக்கும் வெப்பம்: காட்டுத்தீ அபாயம்
மலைப்பகுதியில் தகிக்கும் வெப்பம்: காட்டுத்தீ அபாயம்
ADDED : பிப் 09, 2026 05:23 AM

தாண்டிக்குடி: 'மலைப் பகுதியில் சுட்டெரிக்கும் வெயில் நீடிக்கும் நிலையில் காட்டுத் தீயில் இருந்து வனப்பகுதியை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை காட்டிலும் மலைப் பகுதியில் குறைவாக பதிவானது. இதையடுத்து தற்போது வறண்ட வானிலை நீடித்து வருகிறது.
கன்னிவாடி, வத்தலக்குண்டு, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், பழநி, சிறுமலை, நத்தம் உள்ளிட்ட மலைப்பகுதி சார்ந்த வனச்சரகங்களில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் காட்டுத்தீ பரவி ஏராளமான வன நிலங்கள் தீக்கிரையாகி வருவது வழக்கமாக உள்ளது.
வனத்தீயை தடுக்க கோடை காலங்களில் ஆங்காங்கே தற்காலிக பணியாளர்களை நியமித்து வனப்பகுதியை கண்காணிப்பது, போக்குவரத்து ரோட்டோரங்களில் எளிதில் தீப்பற்ற கூடிய காய்ந்த புல், கருகிய செடிகளை அகற்றுவது, தீத்தடுப்பு கோடுகள் முன்னெச்சரிக்கையாக அமைத்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது.
மாவட்ட நிர்வாகம், வனத்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தீத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.

