sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அதிக ஒலியுடன் இயக்கப்படும் 'டூவீலர்'களால்... காது கிழியுது... வாகனங்களை கைப்பற்றி அபராதம் விதிக்க வலியுறுத்தல்

/

அதிக ஒலியுடன் இயக்கப்படும் 'டூவீலர்'களால்... காது கிழியுது... வாகனங்களை கைப்பற்றி அபராதம் விதிக்க வலியுறுத்தல்

அதிக ஒலியுடன் இயக்கப்படும் 'டூவீலர்'களால்... காது கிழியுது... வாகனங்களை கைப்பற்றி அபராதம் விதிக்க வலியுறுத்தல்

அதிக ஒலியுடன் இயக்கப்படும் 'டூவீலர்'களால்... காது கிழியுது... வாகனங்களை கைப்பற்றி அபராதம் விதிக்க வலியுறுத்தல்


ADDED : பிப் 09, 2026 07:28 AM

Google News

ADDED : பிப் 09, 2026 07:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைரோடு: திண்டுக்கல் மாவட்டத்தில் முக்கிய ரோடுகளில் அதிக ஒலி எழுப்பும் டூவீலர்களில் இளைஞர்கள் செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சைலன்சரை மாற்றி ரேசிங் பைக் போல ஒலி எழுப்பியும், தேவையற்ற வட்டார போக்குவரத்து அலுவலகத்தால் பரிந்துரைக்கப்படாத 'ஏர் ஹாரன்' ஒலியுடன் அதிவேகமாக செல்லும் இவர்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. அம்மாதிரியான வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் அபராதம் விதிக்க வேண்டும் என தன்னார்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இம்மாவட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், சின்னாளபட்டி, நிலக்கோட்டை, கொடைரோடு, வத்தலக்குண்டு, வேடசந்துார் உள்ளிட்ட இடங்களில் சைலன்சரை மாற்றி 'ரேசிங் பைக்' போல ஒலி எழுப்பிக் கொண்டு, வட்டார போக்குவரத்து அலுவலகம் நிர்ணயித்த 'ஹாரன்' ஒலி அளவைக் காட்டிலும், அதிகளவில் ஒலி எழுப்பிக் கொண்டே செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துள்ளது. நெடுஞ்சாலைகள், பஸ் ஸ்டாண்ட், குடியிருப்புப் பகுதிகளில் இளைஞர்கள் அதிக ஒலியுடன் டூவீலர்களில் செல்கின்றனர். திடீரென எழும் கூச்சல் போன்ற ஒலி அலைகளால் (அதிக சத்தம்) குழந்தைகள் திடுக்கிட்டு அழுவதும், முதியவர்கள், நோயாளிகள் அச்சமடைவதும் வாடிக்கையாகிவிட்டது. மருத்துவமனை, பள்ளிக் கல்லுாரி பகுதிகளிலும் கூட போக்குவரத்து விதிமுறைகளை மீறி, டூவீலர்களில் செல்கின்றனர்.

சத்தம் எழுப்புவதோடு மட்டும் இன்றி, 'ஹெல்மெட்' அணியாமல் ஒரு டூவீலரில் நான்கு பேர் வரை பயணித்து திடீரென 'ஓவர்டேக்' செய்து செல்லும் இந்த வாலிபர்களால் சாலை பாதுகாப்பும் கேள்விக்குறியாகி விபத்துக்களும் நடக்கின்றன.

வளைவுகளில் வேகமாக திரும்புவதும், பாதசாரிகள் செல்லும் பகுதிகளில் கட்டுப்பாடு இன்றி பாய்வதும் விபத்துகளுக்கு வழிவகுக்கும் நிலையை உருவாக்கி உள்ளது.

அதிக அபராதம் அவசியம்:: போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். இருப்பிணும் நிரந்தர கண்காணிப்பு இல்லாததால் இந்த பைக் ரேசிங் இளைஞர்களின் அட்டகாசம் தொடர்கிறது. சைலன்சர் இல்லாமல் அதிகரிக்கும் வாகனங்களை பறிமுதல் செய்தல், அதிக அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்., என்றார்.

சுந்தரராஜன், ராஜதானி கோட்டை.






      Dinamalar
      Follow us