ADDED : ஜூலை 10, 2026 04:08 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகளில், சிறு வியாபார கடைகளில் அரசு விதிகளை பின்பற்றுதல், பாதுகாப்பான உணவுப்பொருள் விற்பனை குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
இதில் தயாரிப்பு, வரிசை எண், காலாவதியாகும் தேதி, விலை உள்ளிட்ட விவரங்கள் இல்லாமல் உணவுப்பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு எச்சரிக்கை கொடுக்கப் பட்டது.
டீக்கடைகளில் பிளாஸ்டிக் கவர்களில் சூடான டீ, காபி பார்சல் செய்யாமல் அரசு விதிகளை பின்பற்றி அலுமினிய கவர், எண்ணெய் உறிஞ்சாத பேப்பர், வாழை இலையில் மட்டுமே உணவுப்பொருட்களை பார்சல் செய்ய வேண்டும்.
மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்தனர். இந்நிலையில் தொடர் எச்சரிக்கையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்திய 15 கடைகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.75 ஆயிரம் அபராதம் வசூலித்தனர். மொத்தம் 75 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
