/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பவுர்ணமி, கார்த்திகை தீபம் 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
பவுர்ணமி, கார்த்திகை தீபம் 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்
பவுர்ணமி, கார்த்திகை தீபம் 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்
பவுர்ணமி, கார்த்திகை தீபம் 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : டிச 07, 2024 06:51 AM
திண்டுக்கல்: கார்த்திகை தீபம்,பவுர்ணமியை முன்னிட்டு திண்டுக்கல்லிலிருந்து திருவண்ணாமலை,திருச்செந்துார் கோயில்களுக்கு செல்லும் பக்தர்களுக்காக 150 சிறப்பு பஸ்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.கார்த்திகை தீபம்,பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயில்களுக்கு செல்கின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் செல்கின்றனர். இவர்கள் வசதிக்காக திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழகம் சார்பில் டிச.13, 14,15 ஆகிய 3 நாட்களிலும் திருவண்ணாமலை, திருச்செந்துார் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் வகையில் 150 சிறப்பு பஸ்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பயணிக்கும் பயணிகளுக்கு உதவும் வகையில் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் போக்குவரத்து அதிகாரிகளும் நியமிக்கப்பட உள்ளனர். பயணிகள் சிரமமின்றி பயணங்களை மேற்கொள்ளலாம் என திண்டுக்கல் மண்டல போக்குவரத்து பொது மேலாளர் சசிக்குமார் தெரிவித்தார்.