/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் மண்டலத்திற்கு 156 புதிய பஸ்கள்
/
திண்டுக்கல் மண்டலத்திற்கு 156 புதிய பஸ்கள்
ADDED : பிப் 29, 2024 06:56 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மண்டலத்திற்கு போக்குவரத்துறை துறை சார்பில் புதிதாக 156 பஸ்கள் 'அலர்ட்'ஆகி உள்ளது. இவைகள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திண்டுக்கல் மண்டலத்தில் திண்டுக்கல்,தேனி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இவ்வழித்தடங்களில் இயங்கும் ஏராளமான பஸ்கள் சேதமான நிலையிலும்,அடிக்கடி பழுதாகி நடுரோட்டில் நிற்கும் நிலை ஏற்படுகிறது. மழை நேரங்களில் ஒழுகும் நிலையும் தொடர்கிறது. பஸ்கள் பற்றாக்குறையால் பள்ளி,கல்லுாரி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்லும் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து திண்டுக்கல் மண்டலத்திற்கு புதிதாக 156 பஸ்கள் 'அலர்ட்'ஆகியுள்ளது. இந்த பஸ்களுக்கு பாடி கட்டும் பணிகள் நடந்து வரும் நிலையில் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

