/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மூதாட்டியை தாக்கி 17 வயது சிறுமி கடத்தல்
/
மூதாட்டியை தாக்கி 17 வயது சிறுமி கடத்தல்
ADDED : நவ 14, 2024 07:14 AM
வேடசந்துார்;
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே வீட்டிலிருந்த மூதாட்டியை தாக்கி விட்டு 17 வயது சிறுமியை கடத்தி சென்ற இளைஞரை போலீசார் தேடுகின்றனர்.
அகரம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் பேக்கரி , கறிக்கடை நடத்தி வருபவர் பெலிக்ஸ் 48. மனைவியுடன் வெளியூருக்கு சென்ற நிலையில் இவர்களது மகளான 17 வயது சிறுமி பாட்டி அர்பசாதமேரியுடன் 62, வீட்டில் இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு பெலிக்ஸ் வீட்டிற்கு வந்த 32 வயது இளைஞர் சிறுமியை காரில் கடத்தி செல்ல முயற்சித்துள்ளார். இதை தடுத்த மூதாட்டியை தாக்கி விட்டு சிறுமியை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றார்.
காயமடைந்த மூதாட்டி அர்பசாதமேரி அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.