ADDED : ஏப் 26, 2025 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் வந்த பெங்களூரு- நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் ரயில்வே போலீசார் சோதனை நடந்தினர்.
முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பைகளில் 18 கிலோ குட்கா இருந்தது. திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். 2 மாதங்களில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் மட்டும் 35 கிலோ மேல் கஞ்சா, 40 கிலோ மேல் குட்கா கிடைத்துள்ளது. ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.