/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கடை பூட்டை உடைத்து ரூ.1.80 லட்சம் கொள்ளை
/
கடை பூட்டை உடைத்து ரூ.1.80 லட்சம் கொள்ளை
ADDED : பிப் 15, 2024 06:01 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் திருவள்ளுவர் ரோட்டில் உள்ள எலக்ட்ரிக்கல் கடை பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ.1.80 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
திண்டுக்கல் மாலப்பட்டி சவுந்திரராஜநகரை சேர்ந்தவர் மணிகண்ணன்50. இவர் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே திருவள்ளுவர் ரோட்டில் எலக்ட்ரிக்கல்,பர்னிச்சர் கடை நடத்துகிறார். நேற்று முன்தினம் வியாபாரத்தை முடித்து வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கடையின் பூட்டு உடைந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்த்தினர் மணிக்கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். கடைக்கு வந்து பார்த்த போது கல்லாவிலிருந்த ரூ.1.80 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்தது தெரிந்தது. வடக்கு போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதேபோல் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே செயல்படும் அலைபேசி உதிரி பாகங்கள் விற்பனை கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

