/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மத்திய அரசின் உதவித்தொகை கிடைக்காத 1800 மாணவிகள் தவறு கண்டறிந்து நடவடிக்கை

ADDED : பிப் 23, 2024 05:55 AM
திண்டுக்கல் : மத்திய அரசின் பிஎம்.யாஸஸ்வி கல்வி உதவித்தொகை தலா ரூ.4ஆயிரம் ,1800 மாணவிகளுக்கு வழங்கப்படாத நிலையில் அதன் தவறு கண்டறிந்து மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பிஎம்.யாஸஸ்வி திட்டத்தின் கீழ் 9, 10 வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவிகளுக்கு தலா ரூ.4ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 14 ஆயிரம் மாணவிகளுக்கான உதவித் தொகை வழங்கப்பட்டது. 1800 மாணவிகளுக்கான தொகையை அவர்களது வங்கி கணக்கில் பதிவேற்றம் செய்யவில்லை.வங்கி கணக்கு எண், ஆதார் எண் தவறுதல், பெயர்களில் எழுத்து மாற்றம் காரணங்களால் வரவு வைக்கவில்லை என்பது தெரிந்தது.
இதையடுத்து மாணவிகளின் விவரங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத் துறை அலுவலகத்திலிருந்து பெற்று குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்வதற்கான பணிகளை கல்வித் துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.