/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காட்டு யானைகளை வனத்திற்குள் விரட்ட கன்னிவாடிக்கு வந்த 2 கும்கி யானைகள் யானைகளுக்கு உணவு
/
காட்டு யானைகளை வனத்திற்குள் விரட்ட கன்னிவாடிக்கு வந்த 2 கும்கி யானைகள் யானைகளுக்கு உணவு
காட்டு யானைகளை வனத்திற்குள் விரட்ட கன்னிவாடிக்கு வந்த 2 கும்கி யானைகள் யானைகளுக்கு உணவு
காட்டு யானைகளை வனத்திற்குள் விரட்ட கன்னிவாடிக்கு வந்த 2 கும்கி யானைகள் யானைகளுக்கு உணவு
ADDED : ஜன 03, 2025 11:44 PM

கன்னிவாடி:திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த டாப்சிலிப், முதுமலை முகாம்களில் இருந்து 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டத்தால் 5 ஆண்டுகளாக விவசாய பயிர்கள்  சேதம், வன ஊழியர், விவசாயிகள் பலி என பாதிப்பு தொடர்கிறது.
இதை தொடர்ந்து 2022ல் கலீம், சின்னத்தம்பி ஆகிய கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு காட்டு யானைகள் வனத்திற்குள் விரட்டப்பட்டன. தற்போது மீண்டும் இப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதையடுத்து கும்கி யானைகள் மூலம் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் அனுப்ப வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். நேற்று கோவை மாவட்டம் டாப்சிலிப் கோழிகமுதி யானைகள் முகாமில் இருந்து 29 வயதான சின்னத்தம்பி, முதுமலை யானைகள் முகாமில் இருந்து 55 வயது கிருஷ்ணா ஆகிய இரண்டு கும்கி யானைகள் கன்னிவாடிக்கு வரவழைக்கப்பட்டன.
இரு யானைகளும் வனச்சரக அலுவலகத்தில் குளியல், உணவு போன்றவைகளுக்கு பின் நீலமலைக்கோட்டை அருகே கன்னிமார் கோயில் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டன. தேனி மாவட்டம் வைகை அணை பகுதி ரேஞ்சர் திலீபன் தலைமையிலான உயர் அடுக்கு படை வீரர்கள்,  ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு பகுதி வன அதிவிரைவு படையினரும் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
முகாம் பகுதியில் கும்கிகளின் பராமரிப்பு, செயல்பாடு, யானை கட்டுப்படுத்தும் திட்டம் குறித்த விபரங்கள் அவ்வப்போது வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. வனத்துறை சிறப்பு குழுவினருடன் இணைந்து 24 மணி நேரமும் கண்காணித்து  காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் அனுப்பும் பணி மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

