/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒரு துறைக்கு 2 அமைச்சர்கள் விழாவில் குழப்பிய பெயர் பலகை
/
ஒரு துறைக்கு 2 அமைச்சர்கள் விழாவில் குழப்பிய பெயர் பலகை
ஒரு துறைக்கு 2 அமைச்சர்கள் விழாவில் குழப்பிய பெயர் பலகை
ஒரு துறைக்கு 2 அமைச்சர்கள் விழாவில் குழப்பிய பெயர் பலகை
ADDED : மார் 07, 2024 02:04 AM

திண்டுக்கல்:திண்டுக்கலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உணவு பொருள் வழங்கல் துறைக்கு 2 அமைச்சர்கள் உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி மற்றும் எம்.எல்.ஏ., செந்தில் குமார் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்த நல திட்ட பெயர் பலகை, தி.மு.க.,வினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
அடியனுாத்து, தோட்டனுாத்து, சிறுமலை, ஏ வெள்ளோடு ஊராட்சிகளில் அரசின் நலத்திட்ட உதவிகள், வீட்டுமனை பட்டா வழங்கும் விழா, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா திண்டுக்கல்அடுத்த பொன்னகரத்தில்நடந்தது. அந்த பகுதியில் பள்ளி சுவரையொட்டிமேடை அமைக்கப்பட்டு விழா தொடர்ந்தது.இதற்கான பல்வேறு திட்டங்கள் அடங்கியபலகையில் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது.
இதன் அருகில் குறிப்பிடப் பட்டிருந்த பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் பெயரை அடுத்து உணவு வழங்கல் துறை அமைச்சர் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இது கட்சியினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. செந்தில் குமார் அமைச்சராகி விட்டாரா என விழாவுக்கு வந்த மக்கள் தங்களுடன் வந்தவர்களிடம் கேள்வி எழுப்பினர்.இதை பத்திரிகையாளர்கள் படம் எடுக்கவிடாமல் விழா ஏற்பாட்டாளர்கள் பலகையை மூடி மறைத்தனர்.

