ADDED : பிப் 11, 2024 01:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:திண்டுக்கல், குஜிலியம்பாறையை சேர்ந்த பட்டதாரி சுப்பிரமணி, அரசு வேலைக்காக முயன்று வந்துள்ளார். முகநுாலில் விளம்பரத்தில் இருந்த எண்ணில் தொடர்பு கொண்டார்.
அவர்கள், 'திண்டுக்கல் கலெக்டர் ஆபீஸில் பணிபுரிகிறோம். உறுதியாக உங்களுக்கு அரசு வேலை கிடைத்து விடும். அதோடு 'உங்கள் கோப்புகளை அடுத்த மேஜைக்கு நகர்த்த பணம் தர வேண்டும்' எனக்கூற, பல தவணைகளில், 3 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளனர்.
பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுப்பிரமணி, திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார், சேலம் மாவட்டம், இடைப்பாடி ஆனந்த், 24, கோபிசங்கர், 42, ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்