/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உன்னி காய்ச்சல் பாதித்து திண்டுக்கல்லில் 2 பேர் பலி
/
உன்னி காய்ச்சல் பாதித்து திண்டுக்கல்லில் 2 பேர் பலி
உன்னி காய்ச்சல் பாதித்து திண்டுக்கல்லில் 2 பேர் பலி
உன்னி காய்ச்சல் பாதித்து திண்டுக்கல்லில் 2 பேர் பலி
ADDED : டிச 12, 2024 01:55 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், புதுகாலக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த பழனிசாமி, 61, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு. டிச., 10ல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த பரிசோதனையில் அவருக்கு உன்னி காய்ச்சல் உறுதியானது. நேற்று முன்தினம் இரவு அவர் இறந்தார்.
இதேபோல, ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர், 10 நாட்களுக்கு முன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இறந்த பிறகு அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்தபோது, உன்னி காய்ச்சல் இருந்தது தெரிந்தது.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
உன்னிக்காய்ச்சல் என்பது 'ஸ்க்ரப்டைபஸ்' எனும் சிறிய பூச்சிகள் கடிப்பதால் ஏற்படுகிறது. கை, கால் இடுக்குகள், முதுகு பகுதிகளில் கடிக்கின்றன. இவை கடித்ததும் அந்த இடம் கருப்பாக மாறிவிடும். காய்ச்சல் ஏற்படும்; டெங்கு அறிகுறிகள் இருக்கும். உன்னி காய்ச்சலால் கல்லீரல், மூளை பாதிக்கப்படும்.
செடிகளில் உரசியபடி நடந்து செல்லும் போது உடலில் தொற்றுகின்றன. இதைத்தடுக்க விவசாயப் பணிக்கு செல்வோர் வீட்டிற்கு வந்ததும் சோப்பு போட்டு தேய்த்துக் குளிக்க வேண்டும். சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்திருக்க வேண்டும். அறிகுறி இருந்தால் உடனே டாக்டர்களை அணுக வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.