/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிணற்றுக்குள் தவித்த 2 தொழிலாளிகள் மீட்பு
/
கிணற்றுக்குள் தவித்த 2 தொழிலாளிகள் மீட்பு
ADDED : அக் 02, 2025 04:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல், கன்னிவாடி ஓடை ரோடு பகுதியில், கோபிநாத சுவாமி கோயில் அருகே தனியார் பராமரிப்பில் கிணறுடன் சேர்ந்த தோட்டம் உள்ளது.
கிணற்றில் பராமரிப்பு வேலைக்காக முத்துராம்பட்டியை சேர்ந்த சிவசுப்பிரமணி 30, சரவணகுமார் 35 ஆகியோர் இறங்கினர்.
தொடர்ந்து அவர்களால் மேலே வர முடியவில்லை. இதையடுத்து திண்டுக்கல் தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் மயில்ராஜூ தலைமையிலான மீட்பு குழுவினர் இருவரையும் மீட்டனர்.